ஏதாச்சும் செய்யனும் பாஸ்

ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று லக்கியும், பரிசலும் பதிவு போட்டு இருக்காங்க மிகவும் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள். (பதிவை இன்னும் படிக்கவில்லை அதுவேறு விசயம்).

இருந்தாலும் நாமளும் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று இரண்டு நாளா மண்டைய போட்டு குழப்பிக்கிட்டு, என்னா செய்யலாம்? என்ன செய்யலாம் என்று எனக்கு நானே கேட்டுக்கிட்டேன். ஒன்னும் தோணவே இல்லை.

தூக்கத்தில் கூட ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று புலம்பிக்கிட்டு இருந்து இருக்கேன். காலையில் வந்து gmail யை ஓப்பன் செஞ்சா ஆயில்யன் ஸ்டேட்டஸ் ”மெசேஜ் ஏதாச்சும் செய்யனும் பாஸ்” .என்று போட்டு என் ஆர்வத்தை அதிகப்படுத்தி விட்டுவிட்டார்.

டக்குன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ”புள்ளையார் சதுர்த்திக்கு கொழக்கட்டை செய்யனும் பாஸ்” என்று முடிவு எடுத்துட்டேன் அப்ப நீங்க?

(கொழக்கட்டை செய்வது எப்படி என்று தூயா, ஆயில்யன் இருவரிடம் மட்டும் கேட்டுவிடாதீங்க, கொழகட்டைக்குள் வெங்காயவெடி வைத்து சாப்பிட்ட நிலைக்கு ஆளாக நேரிடும்)

வேறு ஏதாச்சும் செய்யனும் பாஸ்!

திடீர் கொழக்கட்டை செய்வது எப்படி?

கொழக்கட்டை செய்யதெரியவில்லை என்றால் மனைவியிடம் கரண்டியால் அடிவாங்கினால் சுட சுட சூப்பர் கொழகட்டை ரெடி!

8 comments:

said...

கும்மி ஒன்லியில் போட்டால் அது எப்படி இங்கே வருது:((((

பிளாக்கர் எனக்கு எதிராக சதி செய்கிறது.

said...

oru pathivu poodalaamee

said...

டக்குன்னு ஒரு முடிவு நீங்களே எடுத்ததாக போட்டது பொய் தானே..தூக்கத்தில் புலம்பியதைக்கேட்டு .. உங்க நிஜபாஸ் அம்மணி தானே கொழுக்கட்டை செய்யும்படி ஆர்டர் செய்தாங்க?

said...

/கொழக்கட்டை செய்யதெரியவில்லை என்றால் மனைவியிடம் கரண்டியால் அடிவாங்கினால் சுட சுட சூப்பர் கொழகட்டை ரெடி!//


நண்பா! இப்பத்தான் நொம்ப சந்தோஷமா இருக்கு

said...

நீங்க காதல் திருமணம் செய்தவர்தானே, அப்போவே இதுக்கெல்லாம் டிரெயினிங் எடுத்துக்கச்சொல்லி உங்க தங்கமணி சொல்லலையா? இதை நம்ப முடியலயே. சரி இந்த வருஷம் தப்பிக்க ஒரு வழி சொல்றேன், என்னன்னா, நாயகன் படத்துக்கு ரெண்டு டிக்கட் விநாயகர் சதுர்த்தியன்னைக்கு வாங்குங்க, இல்லை டவுன்லோட் பண்ணி வெச்சுக்கிட்டு பாக்க அவங்களை துணைக்குக் கூப்பிடுங்க. எங்க தலயோட காந்தச் சிரிப்பின் மாயம் உடனே அவங்க காதல் பொங்க உங்களுக்கு டசன் டசனா நல்ல (சாப்பிடும் வகை)கொழக்கட்டை செஞ்சு கொடுப்பாங்க:):):)

Anonymous said...

மாக் குழக்கட்டை,
மஞ்சக் குழக்கட்டை
தங்கமணி கொடுத்த
அடி குழக்கட்டை ன்னு

முதல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

said...

தேங்கன்னு ... எதாச்சும் செய்யணுமுன்னா என்கிட்ட சொல்லுங்கோ... தி.மு.கா சார்புல காஞ்சித்தொட்டியும், ஆ.தி.மு.கா சார்புல பிரியாணி பொட்டலமும் குடுப்போடலாம்ச்சாமி........

Anonymous said...

//திடீர் கொழக்கட்டை செய்வது எப்படி?

கொழக்கட்டை செய்யதெரியவில்லை என்றால் மனைவியிடம் கரண்டியால் அடிவாங்கினால் சுட சுட சூப்பர் கொழகட்டை ரெடி!//

ஹி..ஹி...ஹி...

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com