ஏதாச்சும் செய்யனும் பாஸ்

ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று லக்கியும், பரிசலும் பதிவு போட்டு இருக்காங்க மிகவும் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள். (பதிவை இன்னும் படிக்கவில்லை அதுவேறு விசயம்).

இருந்தாலும் நாமளும் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று இரண்டு நாளா மண்டைய போட்டு குழப்பிக்கிட்டு, என்னா செய்யலாம்? என்ன செய்யலாம் என்று எனக்கு நானே கேட்டுக்கிட்டேன். ஒன்னும் தோணவே இல்லை.

தூக்கத்தில் கூட ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று புலம்பிக்கிட்டு இருந்து இருக்கேன். காலையில் வந்து gmail யை ஓப்பன் செஞ்சா ஆயில்யன் ஸ்டேட்டஸ் ”மெசேஜ் ஏதாச்சும் செய்யனும் பாஸ்” .என்று போட்டு என் ஆர்வத்தை அதிகப்படுத்தி விட்டுவிட்டார்.

டக்குன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ”புள்ளையார் சதுர்த்திக்கு கொழக்கட்டை செய்யனும் பாஸ்” என்று முடிவு எடுத்துட்டேன் அப்ப நீங்க?

(கொழக்கட்டை செய்வது எப்படி என்று தூயா, ஆயில்யன் இருவரிடம் மட்டும் கேட்டுவிடாதீங்க, கொழகட்டைக்குள் வெங்காயவெடி வைத்து சாப்பிட்ட நிலைக்கு ஆளாக நேரிடும்)

வேறு ஏதாச்சும் செய்யனும் பாஸ்!

திடீர் கொழக்கட்டை செய்வது எப்படி?

கொழக்கட்டை செய்யதெரியவில்லை என்றால் மனைவியிடம் கரண்டியால் அடிவாங்கினால் சுட சுட சூப்பர் கொழகட்டை ரெடி!