rocket

ராக்கெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருளடக்கம்
[மறை]

* 1 ராக்கெட் வரலாறு
* 2 விண்வெளி யாத்திரைக்கு விதையிட்ட மேதைகள்
* 3 உலக போரில் ராக்கெட் பங்கு:
* 4 உலக போருக்கு பின்
* 5 ராக்கெட் இயங்கும் முறை

[தொகு] ராக்கெட் வரலாறு
இடைக்காலச் சீனாவில் ராக்கெட்.

கி.பி 1044 ஆண்டை ஒட்டி இடைக்காலச் சீனாவில் முதன்முதல் ராக்கெட் கண்டுபிடிக்கப் பட்டதாக அறியப் படுகிறது. ஆனால் 1232 இல் சைனா மங்கோலியரை எதிர்த்துப் போரிட்ட போதுதான் மெய்யாக அவை போர்க்களத்தில் நேராகப் பயன்படுத்தப் பட்டன. 1696 இல் ராபர்ட் ஆண்டர்ஸன் என்னும் ஆங்கிலேயர் எப்படி ராக்கெட் குழல்வடிவுகள் [Rocket Moulds] பண்ணுவது, எப்படி எரிசக்தி உந்து தூள்களை [Rocket Propellants] தயாரிப்பது, எப்படி அவற்றின் பரிமாணங்களைக் கணக்கிடுவது என்று விளக்கிடும் ஈரடுக்குத் தொகுப்பு நூலை எழுதினார். மைசூர் புலிமன்னர் எனப்படும் திப்பு சுல்தான் கைவசம் 1750 ஆம் ஆண்டில் 5000 எறிகணைகள் இருந்ததாகத் தெரிகிறது. 1780 இல் இந்திய அரசருடன் போரிட்ட “குண்டூர் யுத்தத்தில்” [Battle of Guntur] முதன்முதல் பிரிட்டீஷ் படைகள் இந்திய எறிகணைகளால் தாக்கப் பட்டன. 1799 ஆம் ஆண்டில் மைசூரில் பிரிட்டீஷ் ராணுவத்துடன் நடந்த போரில் ஹைதர் அலி, அவரது புலிப் புதல்வன் திப்பு சுல்தான் இருவரும் மூங்கில் கம்புகளில் கட்டி விடுத்த எறிகணை ராக்கெட்டுகள், எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்தன. திப்பு சுல்தான் தோற்றுப் போன பின்பு பிரிட்டீஷ் படையினர் ஸ்ரீரங்க பட்டணத்தில் 700 பயன்படும் எரியா ராக்கெட்டுகளையும், 9000 பயன்பட்டுக் காலியான எரிந்த ராக்கெட்டுகளையும் கண்டதாக அறியப் படுகிறது. எட்டு அங்குல நீளம், ஒன்றரை முதல் மூன்று அங்குல விட்டமுள்ள இரும்புக் குழல் எறிகணைகள் 4 அடி நீளமுள்ள மூங்கில் முனைக் கம்புகளில் கட்டப் பட்டிருந்தன. அவை எறிந்து ஏவப்படும் போது சுமார் 3000 அடித் தூரம் பாய்ந்து செல்லும். அவை யாவும் மைசூர் தாரமண்டல் பேட்டையில் தயாரிக்கப் பட்டவை.


மைசூர்ப் போருக்குப் பிறகு 1804 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் வில்லியம் காங்கிரீவ் [William Congreve] என்பவர் திப்பு சுல்தான் பயன்படுத்திய எறிகணையைக் காப்பி எடுத்து விருத்தி செய்து 9000 அடி தூரம் செல்லும்படி மேம்படுத்தினார். அந்த எறிகணைகள் 1812-1815 ஆண்டுகளில் அமெரிக்க சுதந்திரப் போருக்குப் பிறகு அமெரிக்க-கனடாச் சண்டையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பிரிட்டன் பயன்படுத்தியதாக அறியப் படுகிறது.


காங்கிரீவ் ராக்கெட்

வில்லியம் காங்கிரீவ் தனது ராக்கெட்டில் இரும்புக் குழலும், கருப்புத் தூளுமிட்டு, ஏவுநிறையைச் சமப்படுத்த 16 அடிக் கம்பைப் பயன்படுத்தினார். 1806 இல் பிரிட்டீஷ் கப்பல் படையினர் காங்கிரீட் ராக்கெட்டுகளைக் பிரெஞ்ச் வீரன் நெப்போலியன் படைகள் மீது வீசினர். அடுத்து ஈரோப்பில் 1807 ஆண்டில் கோபன்ஹேகனுக்கு (டென்மார்க்) எதிராக 25,000 காங்கிரீவ் எறிகணைகள் உந்தி எறியப்பட்டன. பிறகு வில்லியம் ஹேல் [William Hale] என்னும் அடுத்தோர் பிரிட்டீஷ் நிபுணர் கம்புகளற்ற எறிகணைகளை ஆக்கினார். அமெரிக்க ராணுவம் 1846-1848 ஆண்டுகளில் நடந்த மெக்ஸிகன் போரிலும், ஆப்ரஹாம் லிங்கன் காலத்து உள்நாட்டுப் போரிலும் [Civil War (1861-1865)] காங்கிரீவ் ராக்கெட்டுகள் பயன்பட்டதாகத் தெரிகிறது.


பிரமாண்டமான புவிஈர்ப்புச் சக்தியை மீறி செயற்கைக் கோள்களும், விண்வெளிக் கப்பல்களும், அண்ட வெளி நிலையங்களும் வானில் ஏவப்பட்டு, பூமியைப் பவனி வரத் தூக்கிச் சென்ற அசுர ராக்கெட் எஞ்சின்களை ஆக்கிய நவீன எஞ்சினியர், விஞ்ஞானிகளில் ஒப்பற்றவர், வெர்னர் ஃபான் பிரெளன் [Wernher Von Braun]. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் பேரழிவு உண்டாக்கிய ஜெர்மன் V-2 ராக்கெட் களை, கட்டளை ஏவுபாணங்களாய் [Guided Missiles] ஏவிய, வெர்னர் பிரெளன் தான் அமெரிக்காவின் புகழ் பெற்ற ராக்கெட் விஞ்ஞானி.
[தொகு] விண்வெளி யாத்திரைக்கு விதையிட்ட மேதைகள்

கி.மு.4000 ஆண்டில் பாபிலோனியன் சுவடுகளில் எழுதப்பட்ட அண்டவெளிப் பயணம் பற்றிய சான்றுக் கதைகள் பல இன்றும் காணக் கிடக்கின்றன. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க எழுத்தாளி லூசியன் [Lucian] வெண்ணிலவுப் பயணம் பற்றி ஒரு கற்பனைப் படைப்பை எழுதியுள்ளார். ஜெர்மன் வானியல் வல்லுநர் [Astronomer] ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler 1540-1650] சந்திரப் பயணம் பற்றி ஒரு விஞ்ஞானப் பதிப்பை எழுதிள்ளார். பிரான்சில் எழுத்தாள ஞானிகள், வால்டேர் [Voltaire] 1752 இல் சனி மண்டலப் பிராணிகளைப் பற்றியும், ஜூல்ஸ் வெர்ன் [Jules Verne] 1865 இல் 'பூமியை விட்டு நிலவுக்கு ' [From the Earth to the Moon] என்னும் பெயர் பெற்ற நாவலில் விண்வெளிப் பயணத்தைப் பற்றியும் எழுதியுள்ளார்கள். பிரிட்டிஷ் எழுத்தாள மேதை H.G. வெல்ஸ் [H.G. Wells], 1898-1901 இல் 'அகிலக் கோளங்களின் யுத்தம் ' [War of the Worlds], 'சந்திரனில் முதல் மானிடர் ' [The First Men in the Moon] என்னும் இரண்டு இனிய நாவல்களைப் படைத்துள்ளார்.


பிரமாண்டமான புவிஈர்ப்புச் சக்தியை மீறி செயற்கைக் கோள்களும், விண்வெளிக் கப்பல்களும், அண்ட வெளி நிலையங்களும் வானில் ஏவப்பட்டு, பூமியைப் பவனி வரத் தூக்கிச் சென்ற அசுர ராக்கெட் எஞ்சின்களை ஆக்கிய நவீன எஞ்சினியர், விஞ்ஞானிகளில் ஒப்பற்றவர், வெர்னர் ஃபான் பிரெளன் [Wernher Von Braun]. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் பேரழிவு உண்டாக்கிய ஜெர்மன் V-2 ராக்கெட் களை, கட்டளை ஏவுபாணங்களாய் [Guided Missiles] ஏவிய, வெர்னர் பிரெளன் தான் அமெரிக்காவின் புகழ் பெற்ற ராக்கெட் விஞ்ஞானி.
[தொகு] உலக போரில் ராக்கெட் பங்கு:
ஜெர்மனின் V-2 ராக்கெட்.
V-2 ராக்கெட் வடிவம்

உலக போரில் ஜெர்மனி கட்டளை ஏவுபாணமாக [Guided Missiles] எறிந்த V-2 ராக்கெட்டுகள் மிரட்டின. V-2 வின் பங்கு மிகபெரியது. இதன் உற்பத்தி 1943, இல் தொடங்கியது. இது 300 km (190 மைல்) தொலைவில் உள்ள இலக்கை 1000 (2,200 lb) கிலோ வெடி பொருளுடன் சென்று தாக்கவல்லது.
[தொகு] உலக போருக்கு பின்
டோர்ந்பெர்கேர் மற்றும் வெர்னர் ஃபான் பிரெளன் பிடிபட்ட போது

போருக்கு பின் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்ய, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ராக்கெட் தொழில் நுட்பத்துக்காக போட்டி போட்டன. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய வெற்றி பெற்றன. இதில் அதிகம் பயன் பெற்றது அமெரிக்காவே.
[தொகு] ராக்கெட் இயங்கும் முறை
ராக்கெட் இயங்கும் முறை.
Rocket thrust is caused by pressures acting on the combustion chamber and nozzle

ஒரு நுண்துளை (nozzle) வழியாக அதிக அழுத்தமுள்ள பாய்மம் (fluid) ஒன்று பீய்ச்சப்படும்போது, அதற்கு எதிர்வினை ஒன்று இருக்கும். இது நியூட்டனின் மூன்றாவது விதியிலிருந்து வருவது. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு. படகு ஓட்டும்போது, துடுப்பால் தண்ணீரை வலிந்து பின்னோக்கித் தள்ளுகிறீர்கள். படகு முன்னோக்கிச் செல்கிறது. ராக்கெட்யில் எரிபொருளும், ஆக்சிஜனும் இருக்கும். இது திட வடிவில், தூளாக இருக்கலாம். அல்லது திரவமாக இருக்கலாம் (பெட்ரோல் போல). அல்லது வாயு எரிபொருள் ஒன்றை மிக அழுத்தத்திலும் மிகக்குறைவான வெப்பத்திலும் (அதாவது கடுங்குளிரிலும்) திரவமாக்கிச் சேர்த்து வைக்கலாம். நீர்மமாக்கப்பட்ட வாயு எரிபொருள்தான் மிக மிக அதிகச் செயல்திறன் கொண்டது. ஹைட்ரஜனை கடுங்குளிரில், கடும் அழுத்தத்தில் திரவமாக்கி, அத்துடன் ஆக்சிஜனையும் அதேபோல திரவமாக்கி எரிபொருளாகவும் ஆக்சிஜனேற்றியாகவும் எடுத்துச் செல்வதுதான் ஒரு ராக்கெட்டுக்கு மிக அதிக சக்தியைத் தரும். அந்த எஞ்சினுக்கு கிரையோஜீனிக் எஞ்சின் என்று பெயர்.