space

புதுப் பயனர் உதவி | தமிழ்த் தட்டச்சு உதவி | Tamil font help | தமிழ் அகரமுதலி | தமிழ் விக்கி செய்திகள் | ஆலமரத்தடி | ஒத்தாசை

விண்ணூர்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(விண்வெளி விமானம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விண்வெளி விமானம்

விண்வெளி விமானம் டிசுகவரி விண்ணில் ஏவப்படுகிறது.
தரவுகள்
இயக்கம் மனிதர்களுள்ள,மீண்டும் பயன்படுத்தக்கூடிய,விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் தரையிறங்கும் அமைப்பு.
அமைப்பு யுனைடட் ஸ்பேஸ் அல்லையன்சு:
தையோகோல்/அல்லையண்ட் டெக்சிசுடம்சு (SRBs)
லாக்கீட் மார்ட்டின் (மார்ட்டின் மரியெட்டா) - (ET)
ராக்வெல்/போயிங்கு (சுற்றுங்கலன்)
நாடு ஐக்கிய அமெரிக்கா
அளவு
உயரம் 184 அடி (56.1 மீ)
விட்டம் 28.5 அடி (8.69 மீ)
நிறை 4,470,000 பவுண்டு (2,030 டன்)
படிகள் 2
கொள்திறன்
Payload to LEO 24,400 கி.கி. (53,600 பவுண்டு)
Payload to
GTO 3,810 கி.கி (8,390 பவுண்டு)
ஏவு வரலாறு
நிலை செயல்படும் நிலையில் உள்ளது.
ஏவல் பகுதி LC-39, கென்னடி விண்வெளி மையம்
SLC-6, வாண்டன்பர்கு AFB (பயன்பாட்டில் இல்லை)
மொத்த ஏவல்கள் 128
வெற்றிகள் 127
தோல்விகள் 1 (ஏவுதலில் தோல்வி, சேலன்ஜர்)
வேறு 1 (மீண்டும் வருகையில் தோல்வி, கொலம்பியா)
முதல் பயணம் ஏப்ரல் 12, 1981
Notable payloads அனைத்துலக விண்வெளி நிலையத்தின் பாகங்கள்]]
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி
கலிலையோ-விண்கலம்
மெகல்லன்-ஆய்வி
சந்திரா X-கதிர் விண்ணாய்வகம்
காம்டன் காமா-கதிர் விண்ணாய்வகம்
கிபோ
Boosters (Stage 0) - திண்ம இராக்கெட் உயர்த்திகள்
No boosters 2
Engines 1 திண்மம்
Thrust ஒவ்வொன்றும் 2,800,000 lbf , கடல் மட்ட ஏவுதலின் போது (12.5 MN)
குறித்த உந்தம் 269 s
எரிநேரம் 124 s
எரிபொருள் திண்மம்
First Stage - வெளிப்புறத் தொட்டி
Engines (none)
(3 விண்வெளி விமான முதன்மை இயந்திரங்கள் சுற்றுங்கலனில் உள்ளன)
Thrust 1,225,704 lbf மொத்தம், கடல் மட்ட ஏவுதலின் போது (5.45220 MN)
குறித்த உந்தம் 455 s
எரிநேரம் 480 s
எரிபொருள் LOX/LH2
Second Stage - சுற்றுங்கலன்
Engines 2 OME
Thrust 53.4 kN ஒருங்கிணைந்த-மொத்த வெற்றிட விசை (12,000 lbf)
குறித்த உந்தம் 316 s
எரிநேரம் 1250 s
எரிபொருள் MMH/N2O4
விண்ணூர்தி அல்லது விண்வெளி விமானம் அல்லது விண்ணோடம் என்பது மனித-விண்வெளிப்பயணத் திட்டங்களுக்காக அமெரிக்காவின் (ஒன்றிணைந்த மாநிலங்கள்) வானூர்தி இயல் மற்றும் விண்வெளி நிருவாகத்திற்கான அமைப்பால் (நாசா) பயன்படுத்தப்படும் விண்கலனைக் குறிக்கும். விண்பயணங்களிலிருந்து இவ்வூர்திகளுக்கு 2010-இல் ஓய்வு அளிக்கப்போவதாக நாசா திட்டமிட்டுள்ளது. ஏவப்படும் போது இது மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டது: துரு-நிறமுடைய வெளிப்புறத் தொட்டி, வெண்ணிறமுடைய இரு திண்ம-இராக்கெட் உயர்த்திகள், இறக்கை-வடிவமுடைய சுற்றுகலம் ஆகியவை. இதன் சுற்றுகலம் விண்வெளி வீரர்கள், செயற்கைக்கோள், விண்வெளி நிலைய பாகங்கள் போன்ற பளுக்களை தாழ்வு-புவி சுற்றுப்பாதையில் (low-earth orbit) செலுத்துகிறது. சுற்றுங்கலத்தின் திட்டப்பணி முடிந்ததும் அதன் சுற்றுப்பாதை கண்காணிப்பு அமைப்பின் (OMS) அமுக்கிகள் எரியூட்டப்பட்டு, சுற்றுங்கலன் அதன் சுற்றுப்பாதையிலிருந்து இறங்கி, கீழ் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைகின்றது.[1]

பொருளடக்கம் [மறை]
1 விண்வெளி விமானம் என்றால் என்ன?
2 விண்ணூர்திகள் பலவகை
3 கட்டுரைக்கான தகவல்கள்
4 குறிப்புதவிகள்


[தொகு] விண்வெளி விமானம் என்றால் என்ன?
விண்வெளி விமானம் என்பது மறு-பகுதிப்பயன்பாடுள்ள, சுற்றுப்பாதையில் இயங்கக்கூடிய, முதன்முதலாக வடிவமைக்கப்பட்ட விண்கலம் ஆகும். தாழ்-புவி சுற்றுப்பாதைக்கு தாங்குபளு அல்லது தள்ளுசுமையை (payload) ஏற்றிச்செல்லவும் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பணிக்குழு-சுழற்சியைச் செய்யவும் செப்பனிடுதல் திட்டங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படுகின்றது.

[தொகு] விண்ணூர்திகள் பலவகை
விண்ணூர்தி அல்லது விண்கலம் என்பது விண்வெளியில் பயணம் செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊர்தி ஆகும். சோவியத் ஒன்றியத்தின் சுபுட்னிக் 1 முதலாவதாக விண்வெளிக்கு ஏவப்பட்ட விண்ணூர்தியாகும். தற்பொழுது பல விண்ணூர்திகளில் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ஏரைன், மனிதனை நிலவிற்க்கு கொண்டுசென்ற சேர்ட்டன், நாசாவின் விண்வெளியோடம் ஸ்பேஸ் ஷட்டில், இரசியாவின் சோயுஸ் என்பன முக்கியமானவையாகும்.

[தொகு] கட்டுரைக்கான தகவல்கள்
[விக்கிப்பீடியா]

[தொகு] குறிப்புதவிகள்
↑ NASA (1995). "Earth's Atmosphere". National Aeronautics and Space Administration. பார்க்கப்பட்ட நாள் October 25 2007.
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF" இருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்: விண்வெளிப் பயணம் | வானியல்
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
New features புகுபதிகை/பயனர் கணக்கு தொடக்கம் பெயர்வெளிகள்
கட்டுரை உரையாடல் மாற்றுக்கள் மாற்றுருவங்கள்பார்வைகள்
வாசிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் செயல்கள்தேடுக
வழிசெலுத்தல்
முதற் பக்கம் சமுதாய வலைவாசல் நடப்பு நிகழ்வுகள் அண்மைய மாற்றங்கள் ஏதாவது ஒரு கட்டுரை உதவி நன்கொடைகள் Embassy கருவிப் பெட்டி
இப் பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் சிறப்புப் பக்கங்கள் அச்சுக்குகந்த பதிப்பு நிலையான இணைப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு இப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2010, 17:13 மணிக்குத் திருத்தினோம்.
Text is available under the Creative Commons Attribution/Share-Alike License; additional terms may apply. See Terms of Use for details.
தகவல் பாதுகாப்பு விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள்

0 comments: