பா.க.ச கிரியேஷன்ஸ்
பெருமையுடன் வழங்கும்
பால பாரதி
In & As
பதிவுலக தாதா
ஜிந்தாபாத்

அவ்வப்போது ஏற்படும் பதிவுலக கலாட்டாக்களை அடிதடி மற்றும் அடாவடி மூலம் தனது சகா வரவணையுடன் தீர்த்து வைப்பவர் பதிவுலக தாதா பாலபாரதி. அப்படி அடிதடிகளில் ஈடுபாடு காட்டினாலும் மாலை 9 மணியானால் தனது லேப் டாப் கம்ப்யூட்டரை திறந்து வைத்துக் கொண்டு தமிழ் ஹப் லாக் - அரிய இணைய தல விளம்பரப் பின்னூட்டத்தைப் பார்த்தவாறே மற்ற வேலைகளையும் பார்ப்பார்.
அந்த பின்னூட்டத்தைப் பார்த்த பின்னர்தான் அவருக்கு அன்றைய தினம் உறக்கமே வரும்.
அந்த அரிய இணைய தலத்தில் வைக்கப் படும் போட்டி ஒன்றில் தானும் கலந்து கொண்டு வெற்றி பெற நினைக்கிறார் பாலபாரதி. அது பிரபல வலைப் பதிவர் ஒருவரைப் பற்றிய போட்டி.
பிற மூத்த பதிவர்களையெல்லாம் கடத்திக் கொண்டு வந்து அந்த கேள்விகளுக்கான விடைகளை மிரட்டி அவர்களிடம் இருந்து கேட்டு போட்டியில் வெற்றி பெறுகிறார்.
பின்னர் அந்த வலைத் தளத்திலிருந்து பாலபாரத்திற்கு அழைப்பு வருகிறது. அங்கே வரும்போது அந்த பிரபல வலைப் பதிவர் பற்றி ஒரு சிற்றுரை ஆற்றச் சொல்கிறார்கள். இவருக்கு அந்த பிரபல பதிவரைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்காத காரணத்தால் அவரது பதிவுகளை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்கிறார். அவரது பதிவுகளையே மணிக் கணக்கில் படித்தில் ஏற்பட்ட பாதிப்பால் அடிக்கடி இவருடன் (மட்டும்) அந்த பிரபலம் அடிக்கடி உரையாடுவது போலவும், இவருக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசனைகள் சொல்வது போலவும் இவருக்குத் தோன்றுகிறது.
இந்த சமயத்தில் மூத்த பதிவர்களுக்கான செகண்ட் இன்னிங்க்ஸ் என்னும் திரட்டியை யாரோ ஹேக் செய்துவிட இவரது இமேஜினரி கேரக்டர் சொல்லும் ஆலோசனையின் படி எப்படி போராடி அந்த திரட்டியைக் கைப் பற்றுகிறார் என்பது படத்தின் கிளைமாக்ஸ்.
இனி படத்தில் சில காட்சிகள்:
----------------------------------------------------------------------------------------
சென்னையில் யானைக் கவுளியில் ஒரு பதிவரை மிரட்டச் செல்கிறார் பாலபாரதி
அந்த பதிவர் : "என்னய்யா? எங்க பிளேஸ்லே வந்து எங்களை மிரட்டுறியா?"
பால பாரதி : "யானைக் கவுளி மட்டும் இல்லை மாமு! சென்னைப் பட்டிணத்திலே எல்லா பிளேஸும் நம்ம பிளேஸ்தான்"
----------------------------------------------------------------------------------------
தமிழ் ஹப்லாக் மூலம் பலரின் பிரச்சினனகளுக்கும் ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார் பாலபாரதி.
பதிவர் : "ஹல்லோ! தல வணக்கம். எனக்கு ரொம்ப நாளா ஒரு பிரசினை, என்னோட பிளாக்ல ஒருத்தன் தினமும் வந்து கும்மி அடிச்சிட்டுப் போறான்"
பால பாரதி அந்த உருவத்தைத் திரும்பிப் பார்க்க அவர் ஆலோசனை சொல்கிறார். அதைக் கேட்டு அந்த நேயருக்கு பாலபாரதி சொல்கிறார்.
பாலபாரதி : "தலைவா! ஒண்ணும் பிரச்சினை இல்லை! சிம்பிள்தான்! எப்பவெல்லாம் வந்து கும்மி அடிக்கிறாங்களோ அப்பவெல்லாம் உங்க பதிலா ஒரு ஸ்மைலி போடுங்க!
----------------------------------------------------------------------------------------
பதிவர் : "தலைவா! என்னோட பிளாக்ல ஒரு பயலும் கமெண்ட் போட மாட்டேங்குறான்"
இமேஜினரி உருவம் : "சிம்பிள், அவரையே வெவ்வேற பேர்ல கமெண்ட் போட்டுக்கச் சொல்லுங்க"
----------------------------------------------------------------------------------------
பாலபாரதி : "வரவ்ஸ், ஐயா வை ஆட்டோ பிடிச்சி ஏத்தி விடு, ரொம்ப நேரமாச்சு"
வரவ்ஸ்(மப்புடன்) : (அவருக்கு அந்த உருவம் தெரியவில்லை என்றாலும் கூட) "தலைவா! மெதுவா இப்படி என் கையப் பிடிச்சிகிட்டு வாங்க! ராத்திரி ஆயிடுச்சு! ரொம்ப நேரமாச்சுல்ல! நேரங்காலமால் வீடு
போய்ச் சேரு! உன் டாக்ஸிலயே உன்னை ஏத்தி விடுறேன்"
"ஏய்..டாக்ஸி... நிறுத்துப்பா... இவரை இவர் சொல்ற இடத்துலே கொண்டு போய் விட்டுடு, இதோ பாருங்க சார், டாக்ஸில பத்திரமா போய்ச் சேர்ந்ததும் தலக்கு ஒரு ஃபோன் போட்டுச் சொல்லிடுங்க, இது உங்க டாக்ஸி மாதிரி"
டாக்ஸி டிரரவர்(தலையைப் பிய்த்துக் கொண்டே) : "யோவ் யாரைய்யா கொண்டு போய் விடுறது?"
வரவ்ஸ் : "யாரையா? அது எனக்கே தெரியாது!"
----------------------------------------------------------------------------------------
மனநல மருத்துவமனையில்
டாக்டர் : "நிஜமாவே அந்த உருவம் உங்களோட பேசுதா? ஆச்சரியமா இருக்கே?"
பாலபாரதி : "அடங்கொய்யாலே! நிஜமாத்தான்யா சொல்றேன். இப்ப வேணா பாரு"
என்று சொல்லிவிட்டு கண்களை மூடி மகர நெடுங்குழைநாதனை மனதார பிரார்த்திக்கிறார்.
உடனே அங்கிருந்த சோஃபாவில் அந்த உருவம் தோன்றுகிறது.
----------------------------------------------------------------------------------------
ஹப்லாக் காமில் பாலபாரதி
பதிவர் : "ஹல்லோ.. பால பாரதியா...?"
பாலபாரதி : "ஆமா. வணக்கம். உங்க பிரச்சினன என்னன்னு சொல்லுங்க?"
பதிவர் : "எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்! கேக்கலாமா?"
பாலபாரதி : "தைரியமா கேளுங்க தல! இதிலென்ன தயக்கம். ம் கமான் கேளூங்க!"
பதிவர் : "பா.க.ச ன்னா என்ன தல?"
பாலபாரதி : "அடிங்! யோவ் நீ அகிலந்தானே! கடவுளே இவங்களுக்கெல்லாம் யாருய்யா லைன் கொடுக்குறது"
----------------------------------------------------------------------------------------
வரவ்ஸ் : "என்ன தல இது! யாராவது திட்டி கமெண்ட் போட்டா இன்னொரு பிளாக் அட்ரஸும் கொடுக்கணும்னு நீதான சொன்னே! இப்போ நீயே அவங்களளத் திருப்பி திட்டுறியே?"
பாலபாரதி: "ஆமாய்யா! ரெண்டு தடவைக்கு மேல திட்டுனா என்ன பண்ணுறதுன்னு ஏதும் சொல்லலையே?"
----------------------------------------------------------------------------------------
எல்லோரும் சேர்ந்து பாலபாரதியைக் கலாய்த்துக் கொண்டிருக்கும்போது
"ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்" என்ற குரலுடன் அங்கே சுப்பைய்யா வாத்தியார் வருகிறார்.
"என்ன நினைச்சிகிட்டி இருக்கீங்க பாலபாரதி பத்தி! அவரு ரொம்ப நல்லவரு! நானும் ஒரு வகைல அவரோட ரசிகந்தான்! அவரை யாரும் கலாய்க்கக் கூடாது! நான் இல்லாத நேரத்துல! ஏன்னா அப்பத்தான் நானும் சேர்ந்து கலாய்க்க முடியும்" என்று பாலபாரதியை கலாய்க்கும் கும்பலில் அவரும் சேர்ந்து கொள்கிறார்.