குவார்ட்டர் கோவிந்தன்: வணக்கம் குருவே
பித்ஸ்: வணக்கம் சிஷ்யரே!
கு.கோ: நாட்டுக்கு அரசியல் தேவையா?
பித்ஸ்: தேவைதான்
கு.கோ: இன்றைய இளைஞர்கள் அரசியலில் அதிக நாட்டமில்லாமல் இருக்கிறார்களே ?
பித்ஸ்: அரசியல் என்பது கெடுதல் என்பது போல தோற்றம் உண்டாகிவிட்டது அதனால்தான். இத்தனை நாள் அரசியல் செய்தவர்களின் தவறும், அதைத் தட்டிக் கேட்கத் தயங்கியர்களின் தவறும் அதில் அடக்கம்
கு.கோ: அந்த தோற்றம் மாறுமா?
பித்ஸ்: மாறும்காலப் போக்கில் இன்னும் இரு தலை முறைகள் கூட ஆகலாம் அந்த மாற்றம்
வருவதற்கு
கு.கோ: ஜனநாயக அரசியலில் நம்பிக்கை இல்லாமல் புரட்சி, புரட்டு சித்தாந்தம் பேசுபவர்கள் சொல்வது எந்த அளவுக்கு சாத்தியம்?
பித்ஸ்: புரட்சிகள் எல்லாம் இந்த நாட்களில் எடுபடாது அவை பெரும்பான்மை மக்களுக்கு புரியாத சித்தாந்தம். அவனுக்குக்காக போராடுகிறார்கள் என்பதைக் கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணம் அந்த புரட்சியின் தோற்றம் பொய்யானது போல் தோன்றுவதால்
கு.கோ: அப்படியானால் பெரும்பான்மை மக்கள் தவறானது என்று புரிந்துகொள்ளலாகுமா?
பித்ஸ்: ஆமாம். கூலி வேலைக்குச் செல்பவனிடம் கூலியை அதிகமாகக் கேட்டுப் போராடு என்று சொன்னால் உள்ள கூலிக்கும் உலை வைக்கிறான் என்ற புரிந்து கொள்ளல்தான் ஏற்படும்!
கு.கோ: இந்தச் சமூகம் ஏன் இன்னும் வரட்டு பிடிவாத குணங்களை கொண்டவர்களை ஒதுக்கிவைத்தே அவர்களை இன்னும் பிடிவாதக் காரர்களாய் ஆக்குகிறது?
பித்ஸ்: ஒதுக்குவதைத் தவிர அவர்களுக்கு வழியும் இல்லையே
கு.கோ: எதிர்கால அரசியல் எப்படி இருக்கும்?
பித்ஸ்: நான் ஜோதிடன் அல்ல! காண்டாக்ட் வகுப்பறை வாத்தியார் நல்லதொரு அரசியல் வாதி கிடைத்தால் நாடு பிழைக்கும்! இதைத்தான் நான் சொல்ல முடியும்!
கு.கோ: சரி சில நேரிடையான கேள்விகள்
பித்ஸ்: ஆகட்டும்!
கு.கோ: ஜெயலலிதா பற்றி?
பித்ஸ்: "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"
அசட்டுத் துணிச்சலும், அகம் கொண்ட பகையும் அரசியலுக்கு உதவாது என்று உணர்ந்தவர்.
உணர்த்தியவரும் அவரே!
கு.கோ: கருணாநிதி பற்றி?
பித்ஸ்: நல்ல கலைஞன் எழுத்துக்களால். நிர்வாகத் திறன் போதாது. பற்றறுக்காதிருந்ததால் சிற்சில சோதனைகளைச் சந்திக்கும் மனிதன்
கு.கோ: வைகோ?
பித்ஸ்: அழுது அடிம்பிடிக்கும் குழந்தை! ஈழத் தமிழனுக்குக் குரல் கொடுத்தவன்!
கு.கோ: ராமதாஸ்?
பித்ஸ்: ம். உமக்கு ஏதோ உள் நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. இருந்தாலும் சொல்கிறேன்.
தனித் தமிழுக்காகப் செயல் அளவில் சிறிதளவேனும் தானும் முயற்சித்துப் பார்த்தவர். ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்தவாரே எதிர்க் கட்சியின் பனியையும் சேர்ந்து செய்கிறார்! (எதிர்க் கட்சியினர் செய்வதில்லை)
கு.கோ: விஜயகாந்த்?
பித்ஸ்: திரைப்படங்களில் மட்டும் ஹீரோ! அரசியலில் காமெடியன்!
கு.கோ: ரஜினி அரசியலுக்கு வந்தால்?
பித்ஸ் : அவரும் கோமாளிதான்!
கு.கோ: சரி இனி சில வலையுலக கேள்விகள்
பித்ஸ் : ஆகட்டும்
கு.கோ:தமிழ் பதிவுகள் குறித்து?
பித்ஸ் : நல்ல பொழுதுபோக்கு சிலருக்கு, செய்தி ஊடகம் சிலருக்கு
கு.கோ:தமிழ் பதிவர்கள் குறித்து?
பித்ஸ் : இணையத்தில் கிடைத்த இணையற்ற உறவுகள்
கு.கோ: கும்மிப் பதிவுகள் பற்றி?
பித்ஸ் :ஒரு நாளின் ஒட்டு மொத்த மன இறுக்கத்தையும் தளர்த்துவிடும் பூங்காக்கள்
கு.கோ: அரசியல் பதிவுகள்?
பித்ஸ் : இன்பத்திலும் கொஞ்சம் துன்பம்
சோதனைகள் இல்லாத வாழ்வு ஏது?
கு.கோ: பின்னூட்ட கயமைத்தனம் ?
பித்ஸ்: ஹிஹி கவன ஈர்ப்புத் தீர்மானம்
கு.கோ: சொந்த செலவில் சூனியம் வைக்க செய்யவேண்டியது?
பித்ஸ்: உண்மைத் தமிழனிடம் கேட்க வேண்டிய கேள்வி
கு.கோ:தனக்குத் தானே பின்னூட்டம் போட்டுக்கொள்வது?
பித்ஸ் : கையறு நிலைப் படலம்
கு.கோ: எத்தனை தூரம் விளக்கிச் சொன்னாலும் நான் சொல்வது சரிதான் என வாதிட்டு அடிவாங்க சலிக்காமல் அடுத்த பதிவிலும் உளருபவர்கள் பற்றீ?
பித்ஸ்: அவரவர் இயல்பு அவரவர்க்கு
கு.கோ:சிறந்த மொக்கைப் பதிவர்?
பித்ஸ்: பித்தானந்தா
கு.கோ:சிறந்த அரசியல் பதிவர்?
பித்ஸ்: மகேந்திப்ரன்.பெ
கு.கோ: ஏன்?
பித்ஸ்: அவர்தான் அரசியலை நன்றாகக் கலாய்க்கிறார்
நன்கு புரிந்து கொண்ட ஒருவரால் மட்டுமே அது இயலும்
கு.கோ: ஆனால் உள்ளே ஒன்றும் விஷயம் இல்லை என்று சொல்கிறார்களே?
பித்ஸ்: ஒன்றும் இல்லாததில்தான் எல்லாம் இருக்கிறது
கு.கோ: தமிழ் பதிவர்கள் பற்றி ஒரு பஞ்ச்
பித்ஸ்: உதவும் உள்ளங்கள் மிகுந்திருக்கும்
கு.கோ: இத்தனை கேள்விகளுக்கும் மிக நல்ல பதிலை சொன்ன உங்களுக்கு என் நன்றி
பித்ஸ்: நல்லது. இத்தனை கேள்விகள் சளைக்காமல் கேட்ட உமக்கும் எமது நன்றி
குவார்ட்டர் கோவிந்தனும் பித்தானந்தாவும்!
Labels: கேள்வி பதில்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இது பின்னூட்டக் கயமை லிஸ்டில் வருமா?
குவா : மொக்கை பதிவுக்கு?
பித் : நீர்தான்
thalaivar of mokkaisvera yaru
shibi mannan of mokkais
antha kalatula shibi mannan puravukkaga than thodaiyay aruthan
intha kalathula namma
shibi
mokkai potu nammai aruthar..
உங்கள் பிளாக்கில் எழுத்துக்கள் கல்வெட்டுக்களில் உள்ளவை போல இருக்கின்றன.
படிக்க முடியவில்லை.
சித்த வைத்தியர்கள் சொல்வது போல ஆசையிருந்தும் செயல்பட முடியாத நிலை!
Post a Comment